முகப்பு
இந்தியா

குருக்ஷேத்திரத்தில் இருந்து மீண்டும் தொடங்கிய ஒற்றுமை நடைப்பயணம்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று காலை குருக்ஷேத்திரத்தில் இருந்து மீண்டும் தொடங்கியது. 

Updated On : 9 ஜனவரி, 2023 at 12:42 PM
பகிர்:

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று காலை குருக்ஷேத்திரத்தில் இருந்து மீண்டும் தொடங்கியது. 

ஒற்றுமை நடைப்பயணம் ஞாயிறன்று கர்னாலில் இருந்து குருக்ஷேத்திர மாவட்டத்திற்குள் நுழைந்தது. திங்கள்கிழமையான இன்று நடைபெறும் நடைப்பயணத்தில் அனைத்து பெண்களும் பங்கேற்பார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் தெரிவித்தார். 

முன்னதாக நேற்று நடைபெற்ற நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Advertisement

காந்தியுடன் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சிங், சுர்ஜேவாலா, தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் ஹரியாணா காங்கிரஸ் தலைவர் உதய் பன் உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்கள் உடன் சென்றனர்.

இந்த பயணம் மாலையில் அம்பாலா மாவட்டத்திற்குள் நுழைய உள்ளது. 

செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய நடைப்பயணம் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரை அடைந்த பிறகு அங்கு காந்தி தேசியக் கொடியை ஏற்றியவுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.