கோப்புப்படம் 
இந்தியா

கடும் குளிர்: தில்லி மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு வெந்நீர்! 

தில்லியில் நிலவிவரும் கடுமையான குளிர் காரணமாக 16 மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகள் குளிப்பதற்கும், சுகாதாரத் தேவைகளுக்கும் வெந்நீர் வழங்கப்படுகிறது.

PTI

தில்லியில் நிலவிவரும் கடுமையான குளிர் காரணமாக 16 மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகள் குளிப்பதற்கும், சுகாதாரத் தேவைகளுக்கும் வெந்நீர் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. 

திகார், மண்டோலி மற்றும் ரோகிணி உள்பட தில்லியில் உள்ள 16 சிறைகளில் இந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.  கூடுதலாக 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கைதிகளுக்கும் ஒரு மரக் கட்டில் மற்றும் ஒரு மெத்தை வழங்கப்படுகிறது. 

சிறைக் கைதிகளின் அடிப்படை மனிதத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறைகளுக்கான ஆய்வுக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தில்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா கூறியுள்ளார். 

மேலும், விசாரணைக் கைதிகளுக்கு வெந்நீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படாது. செல்வாக்கு மிக்க கைதிகளுக்கு வெந்நீர் ஒரு வாளிக்கு ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும் என்று அவர் கூறினார். 

உள்துறை செயலாளர் உடனடியாக அனைத்து கைதிகளுக்கும் சுடுநீர் கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக வயதானவர்களுக்கு எலும்பியல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

எஸ்ஐஆர்-க்கு எதிராக மாநிலம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

SCROLL FOR NEXT