இந்தியா

அஃப்தாபின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டிப்பு!

IANS

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டித்து தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தில்லியில் சோ்ந்து வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் ஷ்ரத்தா வாக்கரை ஆஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசினாா். அண்மையில், அவரை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் அஃப்தாப்பின் நீதிமன்ற காவல் இன்று முடிவடையும் நிலையில், மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சுக்லா முன் பூனாவாலா ஆஜர்படுத்தப்பட்டார். 

அஃப்தாப் பூனாவாலாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாள்கள் நீட்டித்து தில்லி சாக்கெட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவருக்கு காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT