ஸ்வெட்டர் அணியாதது குறித்து மனம் திறந்த ராகுல் 
இந்தியா

நடுங்கியபடி வந்த மூன்று சிறுமிகள்.. ஸ்வெட்டர் அணியாதது குறித்து மனம் திறந்த ராகுல்

எனக்கு நடுக்கம் ஏற்படும் வரை ஸ்வெட்டர் அணியப்போவதில்லை. டி-ஷர்ட் மட்டுமே அணிவது என்று முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

எனக்கு நடுக்கம் ஏற்படும் வரை ஸ்வெட்டர் அணியப்போவதில்லை. டி-ஷர்ட் மட்டுமே அணிவது என்று முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் தென்னிந்தியாவில் தொடங்கி, மத்திய மாநிலங்களைக் கடந்து தற்போது வட மாநிலங்களைத் தொட்டிருக்கிறது.

ஆரம்பம் முதல் இப்போது வரை, ராகுல் காந்தி வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்து நடைப்பயணத்தில் பங்கேற்று வருகிறார். அதிகாலையில் அவருடன் பயணித்த அனைவரும் குளிரிலிருந்து காக்கும் ஆடைகளுடன் நடைப்பயணம் வந்த போதும் கூட, அவர் அதே வெள்ளை நிறை டி-ஷர்ட் தான் அணிந்திருந்தார்.

இது பற்றி பலபல முறை, பலபல வகைகளில் சர்ச்சைகளும் புரளிகளும் செய்திகளும் தோன்றி மறைந்தன.  இது குறித்த கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்து வந்தார்.

இந்த நிலையில், சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் மீண்டும் அதே ஸ்வெட்டர், டி-ஷர்ட் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராகுல், மக்கள் என்னைப் பார்த்து ஏன் டி-ஷர்ட் மட்டும் அணிகிறீர்கள்? உங்களுக்கு குளிரவில்லையா? என்று கேட்கிறார்கள். நான் இதற்கு காரணத்தைக் கூறுகிறேன். நடைப்பயணம் தொடங்கியது போது, கேரளத்தில் சற்று புழுக்கம்தான். ஆனால் நடைப்பயணம் எப்போது மத்தியப் பிரதேசத்தைத் தொட்டதோ குளிர் தொடங்கியது.

ஒரு நாள் மிகவும் ஏழ்மையான பின்னணி கொண்ட மூன்று சிறுமிகள் கிழிந்த அடைகளுடன் என்னிடம் வந்தனர். அவர்களை நான் எனதருகில் வைத்திருந்த போது, அவர்கள் தேவையான ஆடை அணியாததால் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அன்றுதான் நான் ஒரு முடிவு செய்தேன். எனக்கும் குளிரில் நடுக்கம் வரும் வரை, வெறும் டி-ஷர்ட் மட்டும் அணிவது என்று ராகுல் பதிலளித்திருந்தார்.

இதன் மூலம் அந்த மூன்று சிறுமிகளுக்கும் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். 

எனக்கு எப்போது குளிரில் நடுக்கம் ஏற்படுகிறதோ, அப்போதுதான் நான் ஸ்வெட்டர் அணிவது குறித்து யோசிப்பேன். இதன் மூலம் அந்த மூன்று சிறுமிகளுக்கும் நான் கூறுவது என்னவென்றால், உங்களுக்கு குளிரில் நடுக்கம் ஏற்பட்டால், நானும் அதே குளிரை உணர்வேன் என்பதுவே.

கடந்த வாரம் இது பற்றி பேசிய ராகுல், நான் டி-ஷர்ட் அணிந்திருப்பது பற்றி கேள்வி எழுப்பும் ஊடகங்கள், ஏன் ஏழைகளும், கூலித் தொழிலாளிகளும், விவசாயிகளும் கிழிந்த ஆடை அணிந்து கொண்டிருப்பது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என்று கேட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

நவராத்திரி - தீபாவளி வரை சுதேசி மேளா நடத்த அறிவுரை!

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

என்னை மார்போடு சேர்த்தவளே... நிகிதா தத்தா!

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

SCROLL FOR NEXT