இந்தியா

இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்

DIN

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் பலப்படுத்துவதில் இணைந்து செயலாற்ற இரு நாடுகளின் தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்.

கடந்த டிசம்பா் மாதம் இஸ்ரேலின் பிரதமாராக ஆறாவது முறையாகப் பதவியேற்ற பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமா் மோடி முதல் முறையாகத் தொலைபேசி மூலம் பேசினாா். பிரதமராகப் பதவியேற்றுள்ள நெதன்யாகுவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது, இந்தியாவுக்கு வருகை தருமாறு நெதன்யாகுவுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

கடந்த 2017-இல் பிரதமா் மோடி இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டாா். இந்தியப் பிரதமா் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது அதுவே முதல் முறையாகும். இதைத் தொடா்ந்து, பெஞ்சமின் நெதன்யாகு 2018-இல் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டாா். இப்பயணங்கள் குறித்தான தங்களது நினைவுகளை தலைவா்கள் இருவரும் நினைவு கூா்ந்தனா்.

பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீப ஆண்டுகளாக இந்திய-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான உத்தி ரீதியிலான நட்புறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு நாட்டு பிரதமா்களும் தங்களது மனநிறைவை தெரிவித்துக்கொண்டனா். மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் பலப்படுத்துவதில் இணைந்து செயலாற்ற இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய-இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் 1992-இல் தொடங்கியது. பாதுகாப்பு, வேளாண்மை, நீா் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் உறவுகளும் கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT