புது தில்லி: வடமேற்கு தில்லியில் 54 வயது பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் இடுகாட்டில் புதைக்கப்பட்டச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தலைநகர் தில்லியில் கடந்த ஒரு சில மாதங்களாகவே கொலைச் சம்பவங்கள் தொடர்பாக திடுக்கிடும் செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இதையும் படிக்க | குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு - திரை விமர்சனம்
அந்த வகையில், ஜனவரி 2ஆம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட மீனா வதவன், கொலை செய்யப்பட்டு இடுகாட்டில் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், மீனா வட்டிக்கு கடன் கொடுப்பவர் என்றும், குற்றவாளிகள் மூன்று பேருக்குக் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையும் படிக்க.. துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்
இந்த குற்றவாளிகளிடமிருந்து ரூ.5,000 பெற்றுக் கொண்டு பதிவு செய்யாமல் உடலைப் புதைத்ததாக, இடுகாட்டை பராமரித்து வந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.