சந்திரசேகர ராவ் (கோப்புப்படம்) 
இந்தியா

‘இப்படியே போனால் நாடு நரகமாகிவிடும்’: தெலங்கானா முதல்வர் பரபரப்பு கருத்து

மக்களை பிளக்கும் அரசியல் தொடர்ந்தால் நாடு நரகமாகிவிடும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பரபரப்பு கருத்து வெளியிட்டுள்ளார். 

DIN

மக்களை பிளக்கும் அரசியல் தொடர்ந்தால் நாடு நரகமாகிவிடும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பரபரப்பு கருத்து வெளியிட்டுள்ளார். 

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டட திறப்பு விழாவில் அம்மாநில முதல்வரும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், “நமது நாடு அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் மக்கள் நலவளர்ச்சியில் முன்னேறி செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “மதமோதல்கள் மற்றும் மக்களைப் பிளவுபடுத்துவதை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் நாடு நரகமாக மாறிவிடும். தலிபான் அரசைப் போல, ஆப்கானிஸ்தான் அரசைப் போல நாடு சென்றுவிடும்” எனக் குறிப்பிட்டார்.

“நாட்டின் வளர்ச்சிக்கும், மாநிலங்களின் முன்னேற்றத்திற்கும் மத்தியில் முற்போக்கான ஒருபக்க சார்பற்ற அரசு இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் அமைதி,  மரியாதையை உறுதி செய்ய வேண்டும். தெலங்கானா அந்த வழியில் சென்று கொண்டுள்ளது. அதற்கு தொடர்ந்து உங்களின் ஆதரவு வேண்டும்” என சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT