10 நாள்களுக்குள் ரூ.163 கோடியை செலுத்துங்கள்: ஆம் ஆத்மிக்கு அரசு உத்தரவு 
இந்தியா

10 நாள்களுக்குள் ரூ.163 கோடியை செலுத்துங்கள்: ஆம் ஆத்மிக்கு தில்லி அரசு உத்தரவு

அரசு விளம்பரம் என்றுகூறி, கட்சி விளம்பரம் செய்ததாகக் குற்றம்சாட்டி வரும் 10 நாள்களுக்குள் ரூ.163 கோடியை செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

புது தில்லி: அரசு விளம்பரம் என்றுகூறி, கட்சி விளம்பரம் செய்ததாகக் குற்றம்சாட்டி வரும் 10 நாள்களுக்குள் ரூ.163 கோடியை செலுத்துமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016 - 17ஆம் ஆண்டு, அரசுப்  பணத்தை வீணடிக்கும் வகையில், அரசின் விளம்பரம் என்ற போர்வையில், கட்சிக்கு விளம்பரம் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விளம்பரங்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறியிருப்பதாகக் கூறும், தில்லி அரசின் தகவல் மற்றும் விளம்பரத் துறை இயக்குநரகம், உரிய காலத்துக்குள், பணத்தை செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஒருவேளை பணம் செலுத்தப்படாவிட்டால், ஆம் ஆத்மியின் தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பணத்தை செலுத்துவதற்கான ஆணையை, மத்திய அரசின் உத்தரவுப்படி தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பிறப்பித்திருப்பதாகவும், ஆனால் இதுபோன்றதொரு உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT