செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் 
இந்தியா

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத்; ஜன.15ல் தொடக்கி வைக்கிறார் பிரதமர்

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயிலை, காணொலி வாயிலாக ஜன. 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார்

PTI


ஹைதராபாத்: செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயிலை, காணொலி வாயிலாக ஜன. 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார் என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த துவக்கவிழாவின் போது, செகந்திராபாத் ரயில் நிலையத்தில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்ராந்தியை முன்னிட்டு, தெலுங்கு மக்களுக்கு பரிசளிக்கும் வகையில், ஜனவரி 15ஆம் தேதி காலை 10 மணிக்கு, வந்தே பாரத் ரயில் தொடக்க விழா நடைபெறவிருக்கிறது. செகந்திராபாத் - விசாகப்பட்டினம் ரயில், நாட்டில் இயக்கப்படவிருக்கும் எட்டாவது வந்தே பாரத் ரயிலாகும்.

இவ்விரு ரயில் நிலையங்களையும் எட்டு மணி நேரத்தில் இந்த ரயில் சென்றடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கு இடையே வாரங்கல், கம்மம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT