முகப்பு
இந்தியா

ராமா் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க அவகாசம்

ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
கோப்புப்படம்
பகிர்:

ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 

ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 

இந்நிலையில் இந்த வழக்கின் இன்றைய விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக நடைபெற்றது. 

அதில், மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் கோரிய நிலையில், வருகிற பிப்ரவரி முதல் வாரத்திற்குள் பதில் அளிப்பதாக மத்திய அரசு கூறியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான பொது நல வழக்கையொட்டி, சுப்பிரமணியன் சுவாமி இந்த மனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.