இந்தியா

இளைஞர்களின் சக்தி இந்தியாவை இயக்குகிறது: பிரதமர் மோடி

இளைஞர்கள் தான் இந்தியாவினை இயக்கும் சக்தி எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அவர்களுக்கு பெரிய வாய்ப்பினை வழங்கி வருகிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

DIN

இளைஞர்கள் தான் இந்தியாவினை இயக்கும் சக்தி எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அவர்களுக்கு பெரிய வாய்ப்பினை வழங்கி வருகிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் ஹூப்ளியில் தேசிய இளைஞர்கள் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். 

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பொம்மை முதல் சுற்றுலாத் துறை வரை, பாதுகாப்புத் துறை முதல் டிஜிட்டல் தொழில்நுட்பம் வரை இந்தியா உலக அளவில் தலைப்புச் செய்தியாக விளங்குகிறது. இன்று உலக நாடுகள் அனைத்தும் இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டு எனக் கூறுகின்றனர். இது உங்களுடைய நூற்றாண்டு. இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கானது. இது இந்திய வரலாற்றில் மிகவும் சிறப்பான தருணம். நீங்கள் சிறப்பான தலைமுறை. உங்களுக்கு மிக முக்கியமான கடமை இருக்கிறது. உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் மிக முக்கியமான கடமை இருக்கிறது. இளைஞர்களின் சக்திதான் நாட்டினை இயக்கும் மிகப் பெரிய சக்தியாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை வழங்குகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT