டேஹ்ராடூன்: வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் ஜோஷிமட் நகரில் வாழும் மக்கள், வரும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.
இந்த மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க.. உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், ஜோஷிமட் பகுதியில் வசித்து வருவோர் பெற்றிருக்கும் கடன்களுக்கான தவணைகளை செலுத்த ஓராண்டு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
ஜோஷிமட் பகுதியிலிருந்து வெளியேறி, வெளியே வாடகைக்கு குடியிருக்கும் மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் வாடகைப் படி 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.