யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்) 
இந்தியா

காசிக்கு புதிய அடையாளங்கள்! சொகுசுக் கப்பல் தொடக்க விழாவில்...

கங்கையாற்றில் எம்.வி. கங்கா விலாஸ் என்ற சொகுசுக் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (ஜன. 13) தொடக்கி வைத்தார்.

DIN

உத்தரப் பிரதேசத்திலுள்ள காசி இனி புதிய அடையாளங்களால் அறியப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் காசியிலுள்ள கங்கையாற்றில் எம்.வி. கங்கா விலாஸ் என்ற சொகுசுக் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (ஜன. 13) தொடக்கி வைத்தார்.

மேலும், நீர்வழித்தடங்கள் தொடர்பாக ரூ.1000 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 
எம்.வி. கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலில் பயணிக்கவுள்ள சுற்றுலா பயணிகள் கடந்த 3 நாள்களாக வாராணசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைப் பார்வையிட்டு கலாசாரத்தை உணர்ந்தனர். மாநிலத்துக்கு பல புதிய திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்துள்ளார். இதன் மூலம் காசி புதிய அடையாளங்களால் அறியப்படும். 

மேலும் இதில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, காசியையும் அசாமையும் இணைக்கும் கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் சேவையை தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சொகுசுக் கப்பலில் பயணிக்கவுள்ள சுற்றுலா பயணிகள், அசாமிலுள்ள காமிக்யா கோயில், காஸிரங்கா பூங்கா மற்றும் பல சுற்றுலா தலங்களில் பார்வையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.  

எம்.வி. கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் சேவை தொடக்க நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் காணொலி மூலம் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT