இந்தியா

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கரோனா! தீவிர சிகிச்சைப் பிரிவில்...

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

DIN

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியவரும் அதன் முன்னாள் தலைவருமான லலித் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவர் சில மாதங்களுக்கு முன்னதாக, நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு அவை இணையத்தில் வைரலாகின. 

இந்நிலையில், தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 24*7 தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், 'இரண்டு மருத்துவர்கள் கடந்த 3 வாரங்களாக என்னை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது 24 நேரமும் செயற்கை ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் கடந்த 3 வாரங்களாக என்னுடன் இருக்கின்றனர். அனைவருக்கும் நன்றி' எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT