இந்தியா

பஞ்சாபை தில்லியிலிருந்து ஆட்சி செய்யக் கூடாது: ராகுல் காந்தி விமர்சனம்

DIN

பஞ்சாபை தில்லியிலிருந்து ஆட்சி செய்யக் கூடாது என்று பஞ்சாபில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமை) நடைப்பயணம் 122வது நாளாக பஞ்சாபில் நடைபெற்று வருகின்றது.

பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில்,

பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும், தில்லியிலிருந்து அல்ல. முதல்வர் பகவந்த மானுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அவர்தான் பஞ்சாபில் முதல்வர், தில்லி மற்றும் அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து வரக்கூடிய அழுத்தத்தில் செயல்படக் கூடாது.

பகவந்த் மான் கண்டிப்பாக தன்னிச்சையாக செயல்பட வேண்டும். யாருடைய கைப்பாவையாகவும் இருக்கக்கூடாது என்றார்.

செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணமானது இதுவரை கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களை கடந்துள்ளது.

தற்போது பஞ்சாப்பிலிருந்து காஷ்மீருக்கு செல்லும் நடைப்பயணம் ஸ்ரீநகரில் ஜனவரி 30-ஆம் தேதி தேசிய கொடியேற்றத்துடன் நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT