இந்தியா

விளையாட்டில் இந்தியா நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது: பிரதமர் மோடி

நாட்டில் விளையாட்டுத் துறை புதிய சாதனைகளை புரிய விளையாட்டு வீரர்கள் இப்போதே புதிய இலக்குகளைத் தேட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

DIN

நாட்டில் விளையாட்டுத் துறை புதிய சாதனைகளை புரிய விளையாட்டு வீரர்கள் இப்போதே புதிய இலக்குகளைத் தேட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாட்டின் சர்வதேசப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைப் பாராட்டிய பிரதமர், சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவது ஆரம்பம் மட்டுமே என்றும், விளையாட்டுத் துறையில் இந்தியா நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சன்சாத் கேல் மஹாகும்ப் 2022-23 இன் இரண்டாம் கட்டத்தை கானொலி காட்சி மூலம் தொடக்கி வைக்கும் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பல்வேறு போட்டிகளில் இந்தியாவின் செயல்திறன் விவாதப் பொருளாகி வருகிறது. இது ஆரம்பம் மட்டுமே. நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். புதிய இலக்குகளை அடைய வேண்டும்.  

கேல் மஹாகும்ப் அமைப்பைப் பாராட்டிய பிரதமர், உள்ளூர் இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் காத்திருப்பதாக கூறினார்.

மேலும், கடந்த 8-9 ஆண்டுகளில், விளையாட்டுக்கான சிறந்த சூழலை  நாடு உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமய்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: இருவா் கைது

ஷாஹ்தராவில் ஒரு வீட்டில் சகமாரியான துப்பாக்கிச் சூடு: ரூய30 லட்சம் கொள்ளை

இளையான்குடி அருகே ஜாதி தலைவா்களின் பெயா்ப் பதாகைகள் வைப்பதில் மோதல்: 115 போ் மீது வழக்கு

மோத்தி நகரில் ஆண் சடலம் மீட்பு

தெளலகுவானில் அரசுப் பேருந்து தீப்பற்றி விபத்து

SCROLL FOR NEXT