இந்தியா

பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொலை!

DIN

பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி தெரிவித்துள்ளார். 

தகவல் அமைச்சகத்தின் தகவலின்படி, 

கொல்லப்பட்ட 15 பத்திரிகையாளர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 11 பேர் சிந்துவையும், 13 பேர் கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 3 பேர் பலுசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவார். பத்திரிகையாளர்கள் பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். 

பஞ்சாபில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் தற்போது ஜாமீனில் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில் 5 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எட்டு சந்தேக நபர்கள் தப்பியோடினர். குற்றம் சாட்டப்பட்ட ஒருர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். சிந்துவில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏழு பேர் விசாரணையில் உள்ளனர். 

இதுகுறித்து செனட்டில் பேசிய ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முஷ்டாக் அகமது கூறுகையில், 

பத்திரிகையார்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாகாண அரசுகள் தவறிவிட்டதாகக் கூறினார். குற்றவாளிகள் பிடிபட்டிருந்தால் அர்ஷத் ஷெரீப் தியாகியாகியிருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார். 

அகமதுவுக்கு பதிலளித்த அப்பாசி, இது ஒரு சிக்கலான சூழ்நிலை என்றும், குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைந்த அறிக்கையைத் தயாரித்து இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தானின் உள்துறை மற்றும் தகவல் அமைச்சகங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT