கோப்புப் படம். 
இந்தியா

தரமான சாலைகளே விபத்து அதிகரிக்க காரணம்: பாஜக எம்.எல்.ஏ. நாராயண் படேல்

தரமான சாலைகளே விபத்து அதிகரிக்க காரணம் என்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நாராயண் படேல் தெரிவித்துள்ளார்

DIN

தரமான சாலைகளே விபத்து அதிகரிக்க காரணம் என்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நாராயண் படேல் தெரிவித்துள்ளார். 

மோசமான சாலைகள் குறைந்த சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா என்று அவரிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எனது தொகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலைகள் நன்றாக உள்ளன, அதனால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. 

இதை நான் அனுபவித்திருக்கிறேன். அனைவரும் அல்ல, சில ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.  கந்த்வா மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை நான்கு பெரிய விபத்துகள் நடந்துள்ளன. 

முன்னதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், 2017 ஆம் ஆண்டு தனது அமெரிக்க பயணத்தின் போது, ​​மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT