இந்தியா

வாரம் 2 நாள்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி: உச்ச நீதிமன்றம்

DIN

புது தில்லி: வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும், மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

சுருக்குமடி வலைகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மீனவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, வாரத்தில் இரண்டு நாள்கள் அதாவது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் கடலில், 12 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுளள்து.

மேலும், பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மீனவர்கள் தங்களது படகுகளில் உரிய டிராக்கிங் சிஸ்டம் கருவியைப் பொருத்தியிறுக்க வேண்டும்.  நாட்டுப் படகு மீனவர்களும் விசைப்படகு மீனவர்களும் சமமான பலனைப் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT