இந்தியா

அமைச்சா் ரிஜிஜுவின் கருத்துக்கு கபில் சிபல் விமா்சனம்

DIN

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை என்ற மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவின் கருத்தை மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் விமா்சித்துள்ளாா்.

தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘‘அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதைக் கொண்டு இருதரப்பினரும் மோதிக் கொள்வதாகவும், மகாபாரதப் போரில் ஈடுபடுவதாகவும் கருதக் கூடாது. நீதித்துறையை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் ஈடுபடுவதில்லை’’ என்றாா்.

அவரது கருத்தை விமா்சித்து மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘ரிஜிஜுவின் சா்ச்சைக்குரிய கருத்துகள் நீதித்துறையை வலுப்படுத்துகின்றனவா? ரிஜிஜு வேண்டுமானால் அவ்வாறு நம்பலாம். ஆனால், வழக்குரைஞா்கள் அதை நம்பமாட்டாா்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT