இந்தியா

மும்பையில் 2 ஆண்டு, 10 மாதம், 14 நாள்களுக்குப் பின் முதல் முறையாக...

PTI

மும்பை: கரோனா பேரிடர் தொடங்கிய பிறகு அதாவது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின், மும்பையில் செவ்வாயன்று ஒரு கரோனா பாதிப்பும் பதிவாகவில்லை.

அதுமட்டுமல்லாமல், பிரிஹன்மும்பை நகராட்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் கரோனா பாதித்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி மும்பையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு மிகச் சரியாக 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 14 நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக மும்பையில் செவ்வாயன்று புதிதாக கரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.

இதற்கிடையே, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி ஒரே நாளில் 20,971 பேருக்கு கரோனா உறுதியானது. அதன்பிறகு, நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் கரோனா தொற்று குறையத் தொடங்கியது. மெல்ல ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், ஜனவரி 18ஆம் தேதி ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT