குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒடிசா புடவையணிந்து பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி வண்ண நிறங்களுடைய ராஜஸ்தான் தலைப்பாகை (டர்பன்) அணிந்து விழாவில் பங்கேற்றார்.
குடியரசு நாள் விழாவில் கருப்பு வெள்ளை உடையணிந்த பிரதமர் மோடி, பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிறங்கள் உள்ளடங்கிய தலைப்பாகை அணிந்து பங்கேற்றார்.
நாட்டின் 74வது குடியரசு நாள் ஒன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தில்லியில் குடியரசுத் தலைவர் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டு குடியரசு மற்றும் சுதந்திர தின விழாக்களில் தேசியக்கொடியேற்றுபவர்களின் உடைகள் சிறப்பு கவனம் பெறும். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியேற்றி உரையாற்றும்போது அவர் அணிந்து வரும ஆடைகள் பேசுபொருளாவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு குடியரசுநாளையொட்டி தேசியக்கொடியேற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, கோயில் பார்டர் வைத்த ஒடிசா புடவை அணிந்து வந்துள்ளார்.
இதேபோன்று, பிரதமர் நரேந்திர மோடி கருப்பு, வெள்ளை உடை அணிந்து வந்துள்ளார். மேலும், பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிறங்கள் உள்ளடங்கிய ராஜஸ்தான் தலைப்பாகை அணிந்து பங்கேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், ஆடை மற்றும் தொப்பி அணிந்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.