இந்தியா

ஜனநாயகத்தை வலுப்படுத்தப் பாடுபடுவோம்: கேஜரிவால்

DIN

நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் வலுப்படுத்துமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்தார். 

குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மக்களுக்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

சிவில் லைன்ஸில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதல்வர் கேஜரிவால் தேசியக் கொடியை ஏற்றினார். துணை நிலை ஆளுநர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். 

நமது அரசியலமைப்பில் உள்ள லட்சியங்கள், வலிமையான, அமைதியான மற்றும் சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்கத் தோளோடு தோள் சேர்ந்து முன்னேற மீண்டும் நம்மை அர்ப்பணிப்போம் என்று சக்சேனா தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது அனைவரின் பொறுப்பு. குடியரசில் மக்களும், மக்களால் நடத்தப்படும் ஆட்சியும் மிக முக்கியம். இந்தியக் குடியரசை நிறுவ நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பல தியாகங்களைச் செய்தனர். இப்போது இந்த குடியரசை வலுப்படுத்துவது எங்கள் பொறுப்பு என்று தனது சுட்டுரை பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT