இந்தியா

இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!

உச்ச நீதிமன்றத் தீா்ப்புகள் அனைத்தும் வியாழக்கிழமை(ஜன.26) முதல் இந்திய மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார்.

DIN

உச்ச நீதிமன்றத் தீா்ப்புகள் அனைத்தும் வியாழக்கிழமை(ஜன.26) முதல் இந்திய மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார்.

மகாராஷ்ரம்-கோவை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், உச்ச நீதிமன்றத் தீா்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும். அதற்காக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்ததுடன் உயா் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்திருந்தனர். 

இந்நிலையில், குடியரசு நாளையொட்டி, வியாழக்கிழமை(ஜன.26) முதல் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இந்திய மாநில மொழிகளில் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார்.

அதன்படி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் வியாழக்கிழமை முதல் வழங்கப்படுகிறது. 

முதற்கட்டமாக 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட 1,268 தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில், 52 தீர்ப்புகள் தமிழில் இடம் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT