கோப்புப்படம் 
இந்தியா

குஜராத்தில் சாலை விபத்து: 12 மணி நேரத்தில் 7 பேர் பலி!

குஜராத்தில் கடந்த 12 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

குஜராத்தில் கடந்த 12 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் தக்கர்பாபா நகர் பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மற்றொரு சம்பவத்தில், ராஜ்கோட் ஜாம்நகர் நெடுஞ்சாலையில், ஜாம்நகர் பதிவெண் கொண்ட கார் பின்னால் இருந்து டிரக் மீது மோதியது, இதில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்கள் முக்தாபென் கிர்தர்பாய், நயன்பாய் தேவராஜ்பாய் மற்றும் ஒரு குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இன்று அதிகாலை, அகமதாபாத் மெஹ்சானா நெடுஞ்சாலையில் இரண்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். 

நான்காவது விபத்து பனஸ்கந்தா மாவட்டத்தின் தாராட் தாலுகாவில் பதிவாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT