இந்தியா

ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 : ம.பி. முதல்வர்!

பொருளாதார ரீதியில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

DIN

பொருளாதார ரீதியில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வரின் இந்தப் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நர்மதை நதிக்கரையில் உள்ள நர்மதாபுரம் நகரத்தில் நேற்று (ஜனவரி 28) பேசிய அவர் இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி செலவிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய திட்டம் குறித்து அவர் பேசியதாவது: நாங்கள் ஏழைப் பெண்களுக்காக இந்தப் புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த  திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் பயனடைவர். மாதம் 1000 ரூபாய் என ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அனைத்து ஏழைப்பெண்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவர். அரசின் பிற திட்டங்களில் பயன்பெறுபவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் உதவித் தொகை வழங்கப்படும். நான் என்னுடைய சகோதரிகளை பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்தவர்களாக மாற்ற விரும்புகிறேன். அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தால் அவர்களது குடும்பம் சக்தி வாய்ந்ததாக மாறும். குடும்பம் சக்தி வாய்ந்ததாக அமைந்தால் சமூகம் சக்தி வாய்ந்ததாக மாறும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT