இந்தியா

நடுவானில் இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு

DIN

இண்டிகோ விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24ஆம் தேதி நாக்பூரில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக நடுவானில் பயணி ஒருவர் அதன் அவசர கதவை திறக்க முயன்றுள்ளார். 

இந்த விதிமீறலைக் கண்டதும் விமானப் பணியாளர்கள் அந்த பயணியை எச்சரித்துள்ளனர்.

இருப்பினும், விமானம் தரையிறங்கும் போது பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் இதுதொடர்பாக பயணிக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் இண்டிகோ விமான நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து அந்த பயணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

SCROLL FOR NEXT