இந்தியா

மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்துப் பேசிய பிரதமர்!

DIN

இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியில் இந்த ஆண்டின் முதல் பகுதியும், ஒட்டு மொத்தமாக 97-வது பகுதியுமான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று (ஜனவரி 29) உரையாற்றினார்.

இந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் உத்தரமேரூர் குறித்தும், அங்குள்ள பழமையான கல்வெட்டுகள் குறித்தும் பெருமிதமாகப் பேசினார். 

மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டுகள் குறித்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உத்தரமேரூர்.  இங்கே, 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது.  இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராம சபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன குறித்தும் அதில் இடம்பெற்றுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT