இந்தியா

இருபாலருக்கும் ஒரே திருமண வயதுகோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு: உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

DIN

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே திருமண வயதை நிா்ணயிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டது.

பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களுக்கு 21-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்களும் பெண்களுக்கும் ஒரே திருமண வயதை நிா்ணயிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் நபா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கையை முன்வைத்து, அந்நீதிமன்றத்தில் பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜன.13-ஆம் தேதி தனது விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றிக்கொண்டது மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அவரின் மனுவையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT