இந்தியா

2023-24ல் பொருளாதார வளர்ச்சி 6.8%: பொருளாதார ஆய்வறிக்கை அம்சங்கள்

DIN


2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ள நிலையில், வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது சற்று இறக்கம் கண்டு 6 - 6-8 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாகவே இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது.  பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதில், 2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2022 ஜனவரி - நவம்பர் வரையி 30.5 சதவிகித சராசரி வளர்ச்சி கண்டிருந்தது. 

2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மத்திய அரசின் மூலதன செலவு  63.4 சதவிகிதம் அதிகரிக்கும். 

2022ஆம் நிதியாண்டில் வளர்ச்சி கண்ட ஏற்றுமதி வணிகம், 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் கூடுதலாக சீரான வளர்ச்சியை அடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT