இந்தியா

இதன் காரணத்தினால் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்: பகவந்த் மான்

DIN

கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளின் அமைச்சர்களாக மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் அவர்கள் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவரும் நிலையில் பஞ்சாப் மாநில அரசு தனியார் அனல்மின் நிலையத்தை எடுத்து நடத்துவதாக அவர் தெரிவித்தார். பஞ்சாபில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தில்லியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கிறது என மக்கள் பிரதமரிடம்  கூறுகிற வேளையில், மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகிறது என மக்கள் கூறும்போது பிரதமர் அதனை யார் செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்கிறார். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்துக்கு இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். மத்திய அரசு நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான விமான சேவை, துறைமுகங்கள் மற்றும் எல்ஐசி ஆகியவற்றை தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கும் வேளையில் பஞ்சாப் அரசு தனியார் அனல்மின் நிலையத்தை எடுத்து நடத்த முடிவு செய்துள்ளது. நாம் உறுதியானவர்கள். நம்மை  அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் எங்களது தேர்தல் அறிக்கைகளையே செயல்படுத்துகின்றனர். நாங்கள் தனியார் திட்டங்களை வாங்கி வருகிறோம். நாங்கள் தனியார் அனல்மின் நிலையத்தை வாங்கியுள்ளோம். இந்த நாள் பஞ்சாப் மாநிலத்துக்கு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நிறுவன எல்லை அளவிடும் பணி: தடுக்க முயன்ற விவசாயிகள் கைது உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

ரோசாப்பூ ரவிக்கைக்காரி! அதா ஷர்மா பிறந்தநாள் இன்று

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பரிசு

ஜிப்மா் மருத்துவ சிறப்பு முகாம்

மது போதையில் படகிலிருந்து ஆற்றுக்குள் விழுந்தவா் பலி

SCROLL FOR NEXT