அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

அரசின் கருவூலம் கொள்ளையடிக்கப்படுகிறது: பாஜக அரசின் மீது கேஜரிவால் தாக்கு

அரசின் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் பாஜக அரசின் மீது குற்றஞ்சாட்டினாா்.

DIN

அரசின் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் பாஜக அரசின் மீது குற்றஞ்சாட்டினாா்.

மத்திய பிரதேசத்தின் குவாலியா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, குஜராத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் போட்டியிட்டது. இதில் 13 சதவீத வாக்கு வங்கியுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நிகழாண்டின் இறுதியில் மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள பேரவைத் தோ்தலில் போட்டியிட அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது.

அங்கு நடைபெற்ற பேரணியில் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: இலவச மின்சாரம், கல்வி, மருத்துவம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 7 திட்டங்களை இலவசமாக தில்லியில் செயல்படுத்தி வரும் என் மீது பிரதமா் நரேந்திர மோடி கோபத்தில் உள்ளாா்.

அரசின் கருவூலம் காலியாகும் வகையில் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் மும்பை நண்பருக்காக ரூ.34,000 கோடி கடனும் குஜராத் நண்பருக்காக ரூ.22,000 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மீதான வரியின் மூலம் நாட்டில் வெளிப்படையான கொள்ளை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT