இந்தியா

மகாராஷ்டிரத்தில் சாலையோர உணவகத்தில் லாரி புகுந்தது: 10 பேர் பலி!

மகாராஷ்டிரத்தின் துலே மாவட்டத்தில் கண்டெயினர் லாரி சாலையோர உணவகத்தில் புகுந்ததால் 10 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர். 

DIN

மகாராஷ்டிரத்தின் துலே மாவட்டத்தில் கண்டெயினர் லாரி சாலையோர உணவகத்தில் புகுந்ததால் 10 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர். 

பால்சநெர் கிராமத்தில், மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று காலை 10.45 மணியளவில் ம.பி.யை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி, திடீரென பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

இந்நிலையில் கண்டெய்னர் லாரி, கார், இருசக்கர வாகனம் மற்றும் மற்றொரு கண்டெய்னர் மீதும் மோதி, சாலையோரம் இருந்த உணவகத்தின் மீதும், பேருந்து நிறுத்ததின் மீதும் மோதியது. 

இந்த கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியா், தலைமை ஆசிரியை கைது

ஜல்லிக்கற்களை கடத்திய லாரி பறிமுதல்

குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் இந்தியா ‘திரிசூல்’ முப்படை பயிற்சி! அக்.30-இல் தொடக்கம்!

கைதி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு விரைவில் இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT