இந்தியா

கேதார்நாத் கோயில் வளாகத்தில் விடியோ எடுக்கத் தடை!

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலைச் சுற்றி விடியோக்கள் எடுக்கக் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

DIN

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலைச் சுற்றி விடியோக்கள் எடுக்கக் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

சமீபத்தில் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட விடியோ வைரலான நிலையில், பத்ரி-கேதார்நாத் கோயில் கமிட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. 

கோயில் வளாகத்தில் விடியோ எடுத்த நபர்களை கடுமையாக எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாக கமிட்டி சார்பில் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

அந்த கடிதத்தில், சார்தாம் கோயிலில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோயிலில் புனிதத்தன்மை கெடும் வகையில் மக்கள் புகைப்படம் மற்றும் விடியோக்களை எடுத்து வருகின்றன. இதனால் மக்களின் மத உணர்வுகளை தூண்டுவதாக உள்ளது. 

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவகையில் பக்தர்கள் புனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மேலும் கோயில் வளாகத்தில் வைத்து, விடியோ, ஷாட்ஸ், இண்டா லீல்ஸ் போன்ற விடியோக்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோயில் கமிட்டி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT