இந்தியா

விவசாயிகளுடன் வயலில் பயிர் நடவு செய்த ராகுல் காந்தி!

தில்லிக்குச் செல்லும் வழியில் ஹரியாணா மாநிலத்திலுள்ள விவசாயிகளை சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாடினார். 

DIN


தில்லிக்குச் செல்லும் வழியில் ஹரியாணா மாநிலத்திலுள்ள விவசாயிகளை சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாடினார். 

காலையில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் சேர்ந்து வேளாண் பணிகளையும் மேற்கொண்டார். 

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். சமீபத்தில் தில்லியிலுள்ள கரோல் பாகா பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர்களை சந்தித்து உரையாடினார். 

அந்தவகையில், இன்று ஹிமாசலப் பிரதேசத்திற்கு சென்றுகொண்டிருந்த ராகுல் காந்தி, ஹரியாணா மாநிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு அவர்களுடன் வயலில் இறங்கி உரையாடினார். 

விவசாயம் மற்றும் விளைபொருள்கள் சார்ந்து பல்வேறு விஷயங்களை விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது வயலில் அவர்களுடன் சேர்ந்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டார். 

டிராக்டர் ஓட்டியவாறு வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்களுடனும் கலந்துரையாடினார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT