கோப்புப் படம் 
இந்தியா

வாராணசியில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்கள் நியமித்த காய்கறி வியாபாரி!(விடியோ இணைப்பு)

வாராணசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் உள்ள தக்காளிகளை பாதுகாக்க 2 பாதுகாவலர்களை நியமித்துள்ளார். 

DIN

வாராணசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் உள்ள தக்காளிகளை பாதுகாக்க 2 பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.

நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை, கடந்த சில மாதங்களில் வெப்பம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் அஜய் ஃபௌஜி என்கிற வியாபாரி ஒருவர் தனது கடையில் உள்ள தக்காளிகளை பாதுகாக்க 2 பாதுகாவலர்களை நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கடைக்கு வருபவர்கள் திருட்டில் ஈடுபடுகின்றனர். மேலும வன்முறையும் செய்கின்றனர். 

அதனால்தான் பாதுகாவலர்களை நிறுத்தியுள்ளேன். ஒரு கிலோ ரூ.160க்கு விற்பதால் 50, 100 கிராமுக்கு தக்காளி வேண்டும் என கேட்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த விடியோவை ரிட்வீட் செய்து, யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் கட்சியை கிண்டல் செய்து, “தக்காளிக்கு பாஜக ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT