படம்: டிவிட்டர் | சதீஸ் ரெட்டி 
இந்தியா

ஒரு நாடு, ஒரு ஸ்டேஷன் மாஸ்டர்: பிஆர்எஸ் நிர்வாகி கிண்டல்

ஒரே ரயிலை 27 முறை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளதாக பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகி கிண்டல் செய்துள்ளார்.

DIN

ஒரே ரயிலை 27 முறை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளதாக பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகி கிண்டல் செய்துள்ளார்.

அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த 2018-ல் தயாரிக்கப்பட்டு 2019-ல் தில்லி - வாராணசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் 27 வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி நேரில் சென்றோ, காணொலி மூலமோ கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ரயில்வேவுக்கு அமைச்சர் இருக்கும் நிலையில், ஒவ்வொரு ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கில் இருக்கும் தெலங்கானாவை ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சதீஸ் ரெட்டி போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில், ஒரே ரயிலை 27 முறை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளதாகவும், ஒரு நாடு ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் பிரதமருக்கு வாக்களித்த நிலையில், ஸ்டேஷன் மாஸ்டர் கிடைத்துள்ளதாக கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, பாஜக 'வாஷிங் மெஷின்' என்றும் மோடி 'வாஷிங் பவுடர்' என்றும் விமரிசித்து காங்கிரஸ் வெளியிட்ட போஸ்டர் வைரலான நிலையில், சதீஸ் ரெட்டியின் போஸ்டரும் வைரலாக தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT