இந்தியா

பல்கலைக்கழகங்கள் உடன் இணைந்து பஜாஜ் ஆட்டோ பயிற்சி மையங்களை அமைக்க முடிவு!

சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், நேரடி அனுபவத்தைப் பெறக்கூடிய வகையில் பயிற்சி மையங்களை அமைக்க பஜாஜ் ஆட்டோ தெரிவித்தது.

DIN

மும்பை: சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், நேரடி அனுபவத்தைப் பெறக்கூடிய வகையில் பயிற்சி மையங்களை அமைக்க இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்தது.

இந்த பயிற்சி மையங்கள் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு மேம்பட்ட திறன் பயிற்சி வழப்படும். இது உற்பத்தித் துறையில் உள்ள திறன் இடைவெளியை நிவர்த்தி செய்ய உதவும் என்று பஜாஜ் ஆட்டோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ பயிற்சி மையங்களுக்கு உலகெங்கிலுமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை வழங்கும் வேளையில், இந்த திட்டத்திற்கான செயல்பாடுகளுக்கும் நிதியளிக்கும்.

மெக்கட்ரானிக்ஸ், மோஷன் கன்ட்ரோல் மற்றும் சென்சார் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மற்றும் தொழில்துறை 4.0 மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி ஆகிய நான்கு முக்கிய தொகுதிகளில் இந்த பயிற்சி கவனம் செலுத்தும்.

தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் மாற்றங்களால், இளைஞர்களை வேலைவாய்ப்பிற்கு தயார்படுத்துவதில் கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் நோக்கத்தில் பாரம்பரியத்துடன், இந்த இடைவெளியைக் குறைக்க உறுதிபூண்டுள்ள எங்கள் முதன்மை சிஎஸ்ஆர் திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம் என்றார் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநரான ராஜீவ் பஜாஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்ஸோ சட்டத்தில் திருத்தம்: முன்னாள் நீதிபதி விமலா வலியுறுத்தல்

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் தோல்வி

6-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார் அல்கராஸ்!

இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்: இந்தியா - இஸ்ரேல் கையொப்பம்

செப்.15-இல் அண்ணா சிலைக்கு இபிஎஸ் மரியாதை

SCROLL FOR NEXT