இந்தியா

ஆந்திரத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி!

ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 

DIN

ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 

டார்சியின் புறநகரில் திருமண விருத்தில் பங்கேற்று திரும்பியபோது 45 பேர் பயணித்த பேருந்து எதிர்த்திசையில் வரும் பேருந்தை இடிக்காமல் இருக்க ஓட்டுநர் திருப்பியபோது பேருந்து நிலைதடுமாறி கால்வாயில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஆறு வயது சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர். விபத்தில் உயிர்பிழைத்த ஓட்டுநர், பேருந்தின் பிரேக் திடீரென வேலை செய்யாததினால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறினார். 

விபத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் ஓங்கோலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களை மீட்பதற்காக சம்பவ இடத்தில் கிரேன் பயன்படுத்தப்பட்டது. 

பேருந்து ஓட்டுநர் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக முதல்கட்ட விசாரணை தெரிவித்துள்ளது. 

இந்த விபத்துக்கு அம்மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை அளிக்க அதிகாரிகளுட்ககு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT