இந்தியா

ஆம் ஆத்மியின் பொறுப்பின்மையே தில்லி வெள்ளத்துக்கு காரணம்: பாஜக

யமுனை நதி, கால்வாய்களில் தூர்வாரும் பணியை தில்லி அரசு சரிவர செய்யாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

DIN

யமுனை நதி, கால்வாய்களில் தூர்வாரும் பணியை தில்லி அரசு சரிவர செய்யாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தலைநகரின் பல இடங்களும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ததால் தில்லியில் யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுக்கு காரணம் பாஜகவின் சதிச் செயல் என ஆம் ஆத்மி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், யமுனை நதி, கால்வாய்களில் தூர்வாரும் பணியை தில்லி அரசு சரிவர செய்யாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய தில்லியின் பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: யமுனை நதி மற்றும் தில்லியின் கால்வாய்களை தூர்வாரும்  பணியினை ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சரிவர செய்யவில்லை. ஆம் ஆத்மி அரசே தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம். யமுனை நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரியது குறித்து ஆம் ஆத்மி அரசு மீது விசாரணை செய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம். தூர்வாரும் பணிகளை ஆம் ஆத்மி தலைமையிலான செய்ததென்றால் அந்தப் பணிகளுக்காக  எவ்வளவு பணம் செலவு செய்தது. தில்லி வெள்ளத்துக்கு ஆம் ஆத்மி அரசின் ஊழலும், பொறுப்பற்றத் தனமுமே காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தில்லியில் முதல்வர் தலைமையிலான வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடைபெறவில்லை. வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தவறிய ஆம் ஆத்மி தனது இயலாமையை மறைக்க பாஜகவை குறை கூறுகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT