தில்லி: லிப்டில் சிக்கிய 10 பேர் பத்திரமாக மீட்பு
தில்லியில் உள்ள தெற்கு எக்ஸ்டென்ஷன் கிளப்பின் லிப்டில் சிக்கிய 10 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
தில்லியில் உள்ள தெற்கு எக்ஸ்டென்ஷன் கிளப்பின் லிப்டில் சிக்கிய 10 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
தலைநகர் தில்லியில் தெற்கு எக்ஸ்டென்ஷன் மெட்ரோ நிலையத்திற்கு அருகே கோட் கிளப் உள்ளது. இங்குள்ள லிப்டில் இன்று அதிகாலை சென்ற 10 பேர் அதில் திடீரென சிக்கினர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க- மருத்துவப் படிப்பு தரவரிசை: சேலம் மாணவி கிருத்திகா முதலிடம்
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.