முகப்பு
இந்தியா

ஹிமாசலில் மேக வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள குலு மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் பலியானர். மேலும் மூவர் காயமடைந்தனர். 

Updated On : 17 ஜூலை, 2023 at 11:25 AM
பகிர்:

ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள குலு மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் பலியானர். மேலும் மூவர் காயமடைந்தனர். 

குலுவில் உள்ள சான்சாரி கிராமத்தில் அதிகாலை 3.55-க்கு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியான நிலையில், மூவர் காயமடைந்தனர். 

பலியானவர் குலுவில் உள்ள சான்சாரி கிராமத்தில் வசிக்கும் படல் சர்மா என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்களின் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

Advertisement

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து சாலையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

மாநிலத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து கனமழை, சாலை விபத்துக்கள் தொடர்பான சம்பவங்களில் 118 பேர் பலியாகினர் என்று மாநில அவசர பதில் மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ .4,415 கோடி இழப்பை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.