கோப்புப் படம். 
இந்தியா

அமர்நாத்: 16 நாளில் 2 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத் யாத்திரை தொடங்கியதிலிருந்து இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

DIN

அமர்நாத் யாத்திரை தொடங்கியதிலிருந்து இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

ஜூலை 1-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 31 வரை நடைபெற உள்ளது. வருடாந்திர யாத்திரை தொடங்கி 16 நாள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 2,29,221 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

இதையடுத்து, 6,200 பேர் அடங்கிய 15வது குழு பகவதி நகர் முகாமிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். 132 வாகனங்களில் 3,686 பேர் பஹல்காம் பாதையிலும், 109 வாகனங்களில் 2,998 பேருடன் பால்டால் வழித்தடத்திலும் சரியாக அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டனர். 

62 நாள்கள் நிகழ உள்ள அமர்நாத் புனித யாத்திரையில் இந்தாண்டு 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT