இந்தியா

திரெட்ஸில் 15 கோடி பேர் இணைந்தனர்!

மெட்டாவின் 'திரெட்ஸ்' செயலியில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டியுள்ளது. 

DIN

மெட்டாவின் 'திரெட்ஸ்' செயலியில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டியுள்ளது. 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியை ஜூலை 6 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகமான இரண்டு நாள்களில் 7 கோடி பேர் அதில் இணைந்தனர். 5 நாள்களில் திரெட்ஸில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்தது.

இதையடுத்து செயலி தொடங்கி 10 நாள்களில் அதன் பயனர்களின் எண்ணிக்கை 15 கோடியைக் கடந்துள்ளது. 

இதன் மூலமாக பிற சமூக வலைத்தளங்களை திரெட்ஸ் முந்தியுள்ளது. 

2010ல் இன்ஸ்டாகிராம் அறிமுகமானபோது 10 கோடி பாலோவர்ஸ் வருவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது. அதுபோலவே டிக்டாக், சமீபத்தில் பிரபலமாகவுள்ள சாட்ஜிபிடி ஆகியவை கூட இவ்வளவு பயனர்களைப் பெற அதிக காலம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

திரெட்ஸ் 100 நாடுகளில் ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

SCROLL FOR NEXT