முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஜீப் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் சிலர் காயமடைந்தனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:39 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஜீப் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் சிலர் காயமடைந்தனர். 

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டி நாசிக் சாலையில் கத்வாலி கிராமம் அருகே வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, எதிரே வந்த ஜீப் மீது மோதியது. 

இன்று காலை 6.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில உயிரிழந்தனர், பின்னர் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →