கோப்புப் படம். 
இந்தியா

ம.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தை: மீட்புப் பணி தீவிரம்!

மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 மாத பெண் குழந்தை இன்று காலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது. 

DIN

மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 மாத பெண் குழந்தை இன்று காலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது. 

மாவட்ட தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கஜ்ரி பார்கேடா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாகத் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி லலித் சிங் டங்கூர் தெரிவித்தார். 

மாவட்டத்தின் பொறுப்பாளர் மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சரங் மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT