புதுதில்லி: தில்லி விமான நிலையத்தின் முனையம் 3ல் வணிக மற்றும் முதல் வகுப்பு விமான பயணிகளுக்கான புதிய ஓய்வறை செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் இன்று தெரிவித்துள்ளது.
தலைநகர் தில்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஆபரேட்டராக உள்ளது தில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 22,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஓய்வறை 'என்காம் ப்ரைவ்' முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் 30,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும். இது இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வறை வசதியாக மாறும் என்று தில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது விமான நிலையத்தில் மூன்று ஓய்வறைகள் உள்ள நிலையில், வணிகம் மற்றும் முதல் வகுப்பு பயணிகளுக்கான இந்த ஓய்வறை என்கால்ம் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.