ரவீந்திரநாத் 
இந்தியா

தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பி. ரவீந்திரநாத்

தில்லியில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் கலந்துகொள்கிறார். 

DIN

தில்லியில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் கலந்துகொள்கிறார்.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை(வியாழக்கிழமை) தொடங்கவுள்ள நிலையில் தில்லியில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இதில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பி.யுமான ஓ.பி. ரவீந்திரநாத் கலந்துகொள்கிறார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் அழைப்பை ஏற்று கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாளை (20.07.2023) புதுதில்லியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மாலை 5.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்ததின் பேரில் அஇஅதிமுக சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, வேட்புமனுவில் தனது சொத்து, கடன், வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.ரவீந்திரநாத்தின் தோ்தல் வெற்றி செல்லாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. 

அதேநேரத்தில் ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கையை ஏற்று, உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT