மே மாத சம்பவம் ஜூலையில் பிரசாரம்: ரவிசங்கா் பிரசாத்
மணிப்பூரில் மே மாதம் நடைபெற்ற இரு பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவம் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றம் தொடங்கும் முன் ட்விட்டரில் பரப்புரை செய்யப்பட்டது
மணிப்பூரில் மே மாதம் நடைபெற்ற இரு பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவம் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றம் தொடங்கும் முன் ட்விட்டரில் பரப்புரை செய்யப்பட்டது ஏன் என்று முன்னாள் மத்திய முன்னாள் சட்ட அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கா் பிரசாத் கேள்வி எழுப்பினாா்.
‘இந்த விடியோ வெளியான நேரத்தை வைத்துப் பாா்க்கும்போது பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகிறது’ என்று அவா் கூறினாா்.