இந்தியா

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்துவது ஏன்? - ப.சிதம்பரம் விளக்கம்

மைதேயி மற்றும் குகி மக்கள் இடையே வன்முறையை நிறுத்தப்பட்டு, ஒருவருக்கொருவர் பேசுவதற்கு முன்வருவதற்கு, அங்கு நடுநிலையான நிர்வாகம் இருக்க வேண்டும்.

DIN

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி மக்கள் இடையே வன்முறையை நிறுத்தப்பட்டு, ஒருவருக்கொருவர் பேசுவதற்கு முன்வருவதற்கு, அங்கு நடுநிலையான நிர்வாகம் இருக்க வேண்டும். அதனால்தான் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், பழங்குடியின குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்த வன்முறைக்கு மத்தியில் கடந்த மே 4-ஆம் தேதி ஒரு சமூகத்தைச் சோ்ந்த ஆண்கள் திரளாகக் கூடி, மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த இரு பெண்களை ஆடைகள் ஏதுமின்றி சாலையில் அடித்து இழுத்துச் செல்லும் விடியோ காட்சி அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. தடுக்க முயன்ற அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், விடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை ஆடைகளின்றி அழைத்துச் சென்ற கும்பலின் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

மணிப்பூரில், பெரும்பான்மை மைதேயி, குகி நாகா இன மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தின் கீழ் ஒன்றாக வாழ வேண்டும்.

ஒவ்வொரு இனத்தவருக்கும் மற்றொரு பிரிவினர் மீது குறைகள் இருக்கலாம். யார் சரி அல்லது தவறு என்பதைப் பொருட்படுத்தாமல், மூன்று குழுக்களும் ஒவ்வொரும் பேசி தீர்வு காண ஒரு சமூக மற்றும் அரசியல் ஒப்பந்தத்திற்கு வர வேண்டும்.

அனைத்து பிரிவினரும் பழி போடுவதை நிறுத்திவிட்டு வன்முறையை நிறுத்த உறுதி எடுக்க வேண்டும்.

வன்முறையால், அனைத்து தரப்பினரும் விலைமதிப்பற்ற பல உயிர்களை இழந்துள்ளனர் மற்றும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மைதேயி மற்றும் குகி மக்கள் இடையே வன்முறையை நிறுத்தப்பட்டு, ஒருவருக்கொருவர் பேசுவார்த்தைக்கு முன்வர வேண்டுமெனில், அங்கு இரு தரப்பு சார்பற்ற நடுநிலையான நிர்வாகம் இருக்க வேண்டும்.

அதனால்தான் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

SCROLL FOR NEXT